• May 28 2025

தொகுதி அமைப்பாளர்களின் விலகலால் ஐக்கிய மக்கள் சக்திக்குப் பாதிப்பு இல்லை! பொதுச்செயலாளர் தெரிவிப்பு

Chithra / May 27th 2025, 7:55 am
image


ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு நாடு முழுவதிலும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளனர். அவர்களில் ஒருசிலரின் பதவி விலகலால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என  கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்த போனஸ் ஆசனங்களைப் பகிர்வதில் ஏற்பட்ட மனவிரக்தியில் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களில் ஒருசிலர் பதவி விலகியுள்ளனர். 

இந்தப் பிரச்சினை ஏனைய கட்சிகளிலும் ஏற்படும். 

எனவே, ஒருசிலரின் பதவி விலகலால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தப் பிரச்சினைக்குக் கட்சியின் தலைமை தீர்வு காணும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. - என்றார்.


தொகுதி அமைப்பாளர்களின் விலகலால் ஐக்கிய மக்கள் சக்திக்குப் பாதிப்பு இல்லை பொதுச்செயலாளர் தெரிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு நாடு முழுவதிலும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளனர். அவர்களில் ஒருசிலரின் பதவி விலகலால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என  கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்த போனஸ் ஆசனங்களைப் பகிர்வதில் ஏற்பட்ட மனவிரக்தியில் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களில் ஒருசிலர் பதவி விலகியுள்ளனர். இந்தப் பிரச்சினை ஏனைய கட்சிகளிலும் ஏற்படும். எனவே, ஒருசிலரின் பதவி விலகலால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தப் பிரச்சினைக்குக் கட்சியின் தலைமை தீர்வு காணும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement