• Aug 09 2025

திருகோணமலையிலும் இளைஞர்களின் விழிப்புணர்வு நடைபவனி!

shanuja / Aug 9th 2025, 2:46 pm
image

19 ஆவது இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக இளைஞர்களின் நடைபவனி ஒன்று திருகோணமலையிலும் இன்று (9) நடைபெற்றது.


திருகோணமலை இளைஞர் சேவைகள் சம்மேளனமும் திருகோணமலை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயமும் இணைந்து,  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, சர்வ மத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றது.


இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான 19 ஆவது தேசிய இளைஞர் சம்மேளன தெரிவானது சர்வதேச இளைஞர் தினமான எதிர்வரும் 12 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் தேசிய இளைஞர் சம்மேளனம் அமைக்கப்படவுள்ளது.


சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நாடுபூராகவும் இவ்விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்படுகின்றது.


அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (09) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் 

தொடங்கிய இந்த நடைபவனி பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.


மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள்மன்ற உதவிப்பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட சம்மேளன பிரதிநிதி,பிரதேச சம்மேளன பிரதிநிதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள், இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலையிலும் இளைஞர்களின் விழிப்புணர்வு நடைபவனி 19 ஆவது இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக இளைஞர்களின் நடைபவனி ஒன்று திருகோணமலையிலும் இன்று (9) நடைபெற்றது.திருகோணமலை இளைஞர் சேவைகள் சம்மேளனமும் திருகோணமலை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயமும் இணைந்து,  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, சர்வ மத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றது.இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான 19 ஆவது தேசிய இளைஞர் சம்மேளன தெரிவானது சர்வதேச இளைஞர் தினமான எதிர்வரும் 12 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் தேசிய இளைஞர் சம்மேளனம் அமைக்கப்படவுள்ளது.சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நாடுபூராகவும் இவ்விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்படுகின்றது.அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (09) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் தொடங்கிய இந்த நடைபவனி பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள்மன்ற உதவிப்பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட சம்மேளன பிரதிநிதி,பிரதேச சம்மேளன பிரதிநிதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள், இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement