• Sep 24 2025

தங்காலையில் மர்மமாக உயிரிழந்த மூவர் - வௌியான காரணம்

Chithra / Sep 23rd 2025, 6:57 pm
image

 

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. 

இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார மேற்கொண்டார். 

இந்த மரணங்கள் பியர் மற்றும் ஹெரோயின் அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று (22) இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட அதே நேரத்தில் அந்த வீட்டில் இருந்த மற்றொருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில்  தங்காலை சீனிமோதர பகுதியில் உள்ள வீட்டின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் இரண்டு மகன்மார்களே இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தங்காலை, சீனிமோதர பகுதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு வீட்டில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் நேற்று (22) காலை கண்டுபிடிக்கப்பட்டன. 

தங்காலை, சீனிமோதரவில் ஒரு பழைய வீட்டை வாங்கிய ஒருவர் அதைச் சுற்றி ஒரு மதிலைக் கட்டி பல நாட்களாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

அந்த வீட்டைப் புனரமைக்கும் பணிகளுக்கு 3 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மூவரும் இணைந்து வீட்டில் மது அருந்தியிருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் அவர்களில் ஒருவருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து அவர் தமது பிள்ளைகளுக்கு அறிவித்ததாகவும், அவர்கள் வந்து அந்த நபரை தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. 

உயிரிழந்தவர் தங்காலை பகுதியைச் சேர்ந்த விதாரந்தெனியவைச் சேர்ந்த 50 வயதுடைய துசித குமார என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபரின் இரண்டு பிள்ளைகளே இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கல்கிஸ்ஸை நீதவான் பசன் அமரசேன கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். 
சந்தேகநபர், வலவ்வத்த பகுதியில்  வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது. 
அதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், லொறியின் உரிமையாளரான குறித்த சந்தேகநபரை 11 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்து கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
பின்னர், இன்று (23) சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தங்காலையில் மர்மமாக உயிரிழந்த மூவர் - வௌியான காரணம்  தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார மேற்கொண்டார். இந்த மரணங்கள் பியர் மற்றும் ஹெரோயின் அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று (22) இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட அதே நேரத்தில் அந்த வீட்டில் இருந்த மற்றொருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்நிலையில்  தங்காலை சீனிமோதர பகுதியில் உள்ள வீட்டின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் இரண்டு மகன்மார்களே இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை, சீனிமோதர பகுதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு வீட்டில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் நேற்று (22) காலை கண்டுபிடிக்கப்பட்டன. தங்காலை, சீனிமோதரவில் ஒரு பழைய வீட்டை வாங்கிய ஒருவர் அதைச் சுற்றி ஒரு மதிலைக் கட்டி பல நாட்களாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டைப் புனரமைக்கும் பணிகளுக்கு 3 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மூவரும் இணைந்து வீட்டில் மது அருந்தியிருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அவர்களில் ஒருவருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தமது பிள்ளைகளுக்கு அறிவித்ததாகவும், அவர்கள் வந்து அந்த நபரை தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர் தங்காலை பகுதியைச் சேர்ந்த விதாரந்தெனியவைச் சேர்ந்த 50 வயதுடைய துசித குமார என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரின் இரண்டு பிள்ளைகளே இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கல்கிஸ்ஸை நீதவான் பசன் அமரசேன கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர், வலவ்வத்த பகுதியில்  வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், லொறியின் உரிமையாளரான குறித்த சந்தேகநபரை 11 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்து கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், இன்று (23) சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement