• Sep 24 2025

ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு

Chithra / Sep 23rd 2025, 7:10 pm
image


ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சேவிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன. 

கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்று மாலை இச்சந்திப்பு நடைபெற்றது. 

இதன்போது தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடித வரைவை கையளிக்கப்பட்டது. 

தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதனும், சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம்.சந்திரகுமார், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரனும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். 


காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும், பிரதானமாக செம்மணி உட்பட  வடக்கு கிழக்கு தாயகத்தில் அடையாளப்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும்,  

கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசனே, தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு என பல கோரிக்கைகள் இக்கடிதத்தில் உள்ளடங்கியிருந்தன. 

அவற்றை நேரடியாகவும் ஐ.நா. ஒருங்கிணைப்பாளரிடம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சேவிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன. கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்று மாலை இச்சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடித வரைவை கையளிக்கப்பட்டது. தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதனும், சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம்.சந்திரகுமார், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரனும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும், பிரதானமாக செம்மணி உட்பட  வடக்கு கிழக்கு தாயகத்தில் அடையாளப்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும்,  கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசனே, தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு என பல கோரிக்கைகள் இக்கடிதத்தில் உள்ளடங்கியிருந்தன. அவற்றை நேரடியாகவும் ஐ.நா. ஒருங்கிணைப்பாளரிடம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement