மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் கட்டில்கள் நிரம்பி வழியோரப் பாதைகளில் படுக்கும் அவலநிலையே இங்குள்ளது. இது அரசின் ஓர வஞ்ச செயற்பாடாகும். இந்த நிலை மாறி எங்களுடைய மாவட்டத்துக்கு முன்னுரிமை வழங்குவீர்களா?
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மீதான கேள்விகளிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இங்குள்ள நோயாளர் விடுதிகள் கட்டில்கள் இல்லாமல் நிரம்பிக் காணப்படுகின்றன. நோயாளர்கள் வழியோரங்களில் நிலத்தில் பாய்போட்டு இருக்கும் அவல நிலையே காணப்படுகின்றது. இந்த நிலை மாற்றமடையுமா என்று கேள்வியெழுப்பிளார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், குறித்த வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவோம். விடுதியை சீரமைப்பதற்காக இலங்கையை விட இந்திய அரசும் உதவி செய்யவுள்ளது. ஆகவே இதற்கான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மன்னார், முல்லை வைத்தியசாலையில் பாதைகளில் படுக்கும் நோயாளிகள் - அரசின் ஓர வஞ்ச செயற்பாடே இது சபையில் ரவிகரன் எம்.பி மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் கட்டில்கள் நிரம்பி வழியோரப் பாதைகளில் படுக்கும் அவலநிலையே இங்குள்ளது. இது அரசின் ஓர வஞ்ச செயற்பாடாகும். இந்த நிலை மாறி எங்களுடைய மாவட்டத்துக்கு முன்னுரிமை வழங்குவீர்களா இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மீதான கேள்விகளிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இங்குள்ள நோயாளர் விடுதிகள் கட்டில்கள் இல்லாமல் நிரம்பிக் காணப்படுகின்றன. நோயாளர்கள் வழியோரங்களில் நிலத்தில் பாய்போட்டு இருக்கும் அவல நிலையே காணப்படுகின்றது. இந்த நிலை மாற்றமடையுமா என்று கேள்வியெழுப்பிளார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், குறித்த வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவோம். விடுதியை சீரமைப்பதற்காக இலங்கையை விட இந்திய அரசும் உதவி செய்யவுள்ளது. ஆகவே இதற்கான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.