இஸ்ரேலிய ARKIA AIRLINES விமான நிறுவனத்திற்கு சொந்தமான IZ 639 ரக விமானம் இன்று முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 18.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு பயணிக்கவுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதைத் தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் நாளை காலை 6:15 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
ஓமன் மற்றும் மாலைத்தீவில் இஸ்ரேலிய விமானங்களுக்கான வான்வெளி மூடப்பட்டதால், விமானம் சீஷெல்ஸ் வழியாக கொழும்பை அடையவும், கொழும்பிலிருந்து டெல் அவிவ்விற்கு செல்லவும் 9:15 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இரவு 22.30 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் IZ 640 ரக விமானம் வியாழக்கிழமை காலை 5:35 மணிக்கு டெல் அவிவ் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட இந்த விமானம் வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.
இஸ்ரேலில் இருந்து கட்டுநாயக்க வரும் ARKIA AIRLINES விமானம் இஸ்ரேலிய ARKIA AIRLINES விமான நிறுவனத்திற்கு சொந்தமான IZ 639 ரக விமானம் இன்று முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 18.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு பயணிக்கவுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதைத் தெரிவித்துள்ளார். இந்த விமானம் நாளை காலை 6:15 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. ஓமன் மற்றும் மாலைத்தீவில் இஸ்ரேலிய விமானங்களுக்கான வான்வெளி மூடப்பட்டதால், விமானம் சீஷெல்ஸ் வழியாக கொழும்பை அடையவும், கொழும்பிலிருந்து டெல் அவிவ்விற்கு செல்லவும் 9:15 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 22.30 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் IZ 640 ரக விமானம் வியாழக்கிழமை காலை 5:35 மணிக்கு டெல் அவிவ் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட இந்த விமானம் வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.