முல்லைத்தீவுக்கு என்று இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியரை இதுவரையில் ஏன் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்துள்ளீர்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மீதான கேள்விகளின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் நிலைப்பாடு படுமோசமாக உள்ளது. அதிலும் முல்லைத்தீவிலுள்ள வைத்தியர்கள் ஒரு கிழமை தான் அங்கு சேவையில் உள்ளார்கள்.
மூன்று கிழமை அங்கு இல்லை. இதனை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் ஆதாரங்களுடன் முன்வைத்தால் நடவடிக்கை எடுப்பீர்களா? என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ, முறைப்பாட்டை தாருங்கள். தேடிப்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
முல்லைக்கு மாற்றப்பட்ட வைத்தியரை ஏன் சாவகச்சேரியில் வைத்திருக்கிறீர்கள் ஆதாரங்களைக் காட்டினால் நடவடிக்கை எடுப்பீர்களா - அர்ச்சுனா எம்.பி கேள்வி முல்லைத்தீவுக்கு என்று இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியரை இதுவரையில் ஏன் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்துள்ளீர்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மீதான கேள்விகளின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் நிலைப்பாடு படுமோசமாக உள்ளது. அதிலும் முல்லைத்தீவிலுள்ள வைத்தியர்கள் ஒரு கிழமை தான் அங்கு சேவையில் உள்ளார்கள். மூன்று கிழமை அங்கு இல்லை. இதனை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் ஆதாரங்களுடன் முன்வைத்தால் நடவடிக்கை எடுப்பீர்களா என்றார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ, முறைப்பாட்டை தாருங்கள். தேடிப்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.