• Sep 24 2025

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை!

Chithra / Sep 23rd 2025, 8:32 pm
image


நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு இலத்திரனியல் விசா வழங்கும் விடயம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்றத் தவறிய குற்றத்துக்காக முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகமான ஹர்ஷா இலுக்பிட்டியாவுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் இன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

ஆயினும், இந்த வழக்கில் அவர் ஏற்கனவே ஓராண்டு காலம் விளக்கமறியலில் இருந்தமையைக் கருத்தில் கொண்டு, இப்போது முதல் அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு இலத்திரனியல் விசா வழங்கும் பொறுப்பை மிக உயர்ந்த கட்டணத்துக்கு - அதிகாரப்பூர்வ ஏலங்களை கோராமல் - வி.எவ்.எஸ். என்ற நிறுவனத்திற்கு வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசின் முடிவுக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க ஆகிய மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையோடு அந்த வழக்கின் சார்பில் தாங்களே முன்னிலையாகி நீதிமன்றத்தில் வாதிட்டும் இருந்தனர்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த வழக்கை ஒட்டி உயர்நீதிமன்றம் ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

இலத்திரனியல் விசா வழங்கும் பொறுப்பை வெளி நிறுவனத்துக்கு மிக உயர்ந்த கட்டணத்தில் 'அவுட்சோர்ஸ்' செய்வதற்கான அமைச்சரவையின் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், பழைய முறைப்படி - முந்தைய - விரைவான மின்னணு பயண அங்கீகார செயல்முறையை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டது.

ஆனால், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றாமல் முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகமான ஹர்ஷா இலுக்பிட்டிய இழுத்தடித்தார் என்று கூறப்படுகின்றது. பழைய முறைமையை மீண்டும் கொண்டுவர மாதக் கணக்கில் காலம் எடுக்கும் என்றார் அவர்.

இந்த நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு என மனுதாரர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க ஆகிய மூவரும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தத் தவறியதற்காக ஹர்ஷா இலுக்பிட்டியை கைது செய்து விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் கைதானமையை அடுத்து 24 மணி நேரத்துக்குள் பழைய முறைமையின் கீழ் விசா வழங்கும் முறைமை உடனடியாக நடைமுறைக்கு வந்தமை குறிப்பிடத்தகது.

அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை நடைபெற்றது. ஆரம்பத்தில் குற்றத்தை ஏற்க ஹர்ஷா இலுக்பிட்டிய மறுத்தார்.

எனினும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மன்றில் சூடு பிடித்தமையை நீதிமன்றத்தின் உத்தரவை புறக்கணித்தமையை ஒப்புக்கொண்டு, ஹர்ஷா இலுக்பிட்டி உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்டார்.

இந்த நிலையிலேயே அவருக்கு இந்தத் தண்டனைத் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு இலத்திரனியல் விசா வழங்கும் விடயம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்றத் தவறிய குற்றத்துக்காக முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகமான ஹர்ஷா இலுக்பிட்டியாவுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் இன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.ஆயினும், இந்த வழக்கில் அவர் ஏற்கனவே ஓராண்டு காலம் விளக்கமறியலில் இருந்தமையைக் கருத்தில் கொண்டு, இப்போது முதல் அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு இலத்திரனியல் விசா வழங்கும் பொறுப்பை மிக உயர்ந்த கட்டணத்துக்கு - அதிகாரப்பூர்வ ஏலங்களை கோராமல் - வி.எவ்.எஸ். என்ற நிறுவனத்திற்கு வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசின் முடிவுக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க ஆகிய மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையோடு அந்த வழக்கின் சார்பில் தாங்களே முன்னிலையாகி நீதிமன்றத்தில் வாதிட்டும் இருந்தனர்.கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த வழக்கை ஒட்டி உயர்நீதிமன்றம் ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.இலத்திரனியல் விசா வழங்கும் பொறுப்பை வெளி நிறுவனத்துக்கு மிக உயர்ந்த கட்டணத்தில் 'அவுட்சோர்ஸ்' செய்வதற்கான அமைச்சரவையின் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், பழைய முறைப்படி - முந்தைய - விரைவான மின்னணு பயண அங்கீகார செயல்முறையை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டது.ஆனால், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றாமல் முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகமான ஹர்ஷா இலுக்பிட்டிய இழுத்தடித்தார் என்று கூறப்படுகின்றது. பழைய முறைமையை மீண்டும் கொண்டுவர மாதக் கணக்கில் காலம் எடுக்கும் என்றார் அவர்.இந்த நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு என மனுதாரர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க ஆகிய மூவரும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தத் தவறியதற்காக ஹர்ஷா இலுக்பிட்டியை கைது செய்து விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவர் கைதானமையை அடுத்து 24 மணி நேரத்துக்குள் பழைய முறைமையின் கீழ் விசா வழங்கும் முறைமை உடனடியாக நடைமுறைக்கு வந்தமை குறிப்பிடத்தகது.அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை நடைபெற்றது. ஆரம்பத்தில் குற்றத்தை ஏற்க ஹர்ஷா இலுக்பிட்டிய மறுத்தார்.எனினும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மன்றில் சூடு பிடித்தமையை நீதிமன்றத்தின் உத்தரவை புறக்கணித்தமையை ஒப்புக்கொண்டு, ஹர்ஷா இலுக்பிட்டி உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்டார்.இந்த நிலையிலேயே அவருக்கு இந்தத் தண்டனைத் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement