தேயிலை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தாமதமின்றி உரிய காலத்தில் தட்டுப்பாடில்லாமல் உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன். அதற்காக 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அஜந்த கம்மெத்தகே எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பெருந்தோட்ட கைத்தொழில் துறையில் தேயிலைப் பயிர்ச் செய்கை அண்மைக் காலமாக வீழ்ச்சியடைந்தது. முக்கியமாக உரம் தொடர்பான பிரச்சினையே அதற்கு காரணமாகியது.
கடந்த காலங்களில் உரம் இல்லாத காரணத்தினால் முழுமையான விவசாயத் துறையும் பெரும் வீழ்ச்சிக்குள்ளானது.
அதனையடுத்து அனைத்து யோசனைகளையும் கவனத்திற் கொண்டு உரம் விநியோகிப்பதில் புதிய முறைமை ஒன்றை உருவாக்குவதற்காக நாம் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம்.
அத்துடன் தேயிலை சபை மூலம் 2000 மில்லியன் ரூபாவை 2025 ஆம் ஆண்டுக்கான உர நிவாரணத்துக்காக ஒதுக்கியுள்ளோம்.
இதேவேளை பெருந்தோட்ட பகுதிகளில் அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வசிப்பிடங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 66.9 சதவீதமானவை மண்சரிவு அபாயத்துக்கு உட்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அந்த 5 ஆயிரத்து 64 வீடுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 97 வீடுகளும் அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டில் மீரியபெத்தை மண்சரிவில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
குறித்த பகுதி மண்சரிவு அபாயமுள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டு அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவித்திருந்த அரசாங்கம் அவர்கள் வசிப்பதற்கான மாற்றிடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
அந்தவகையில், பெருந்தோட்டத் துறையில் அதிக மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசித்துவரும் 2125 குடும்பங்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி,ஜனாதிபதி தலைமையில் தலா 32 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளும் 10 பேர்ச் காணியும் வழங்கும் நிகழ்வொன்று பண்டாரவளையில் நடத்தப்படவுள்ளது.
அதேநேரம், பதுளையில் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பதுளை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 15 இடங்கள் பாதுகாப்பு வேலி இடுதல் உள்ளிட்ட பணிகள் மூலம் 150 மில்லியன் ரூபாய் செலவில் மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள்; தேயிலை தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடின்றி உரம் - அமைச்சர் அறிவிப்பு தேயிலை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தாமதமின்றி உரிய காலத்தில் தட்டுப்பாடில்லாமல் உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன். அதற்காக 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அஜந்த கம்மெத்தகே எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.பெருந்தோட்ட கைத்தொழில் துறையில் தேயிலைப் பயிர்ச் செய்கை அண்மைக் காலமாக வீழ்ச்சியடைந்தது. முக்கியமாக உரம் தொடர்பான பிரச்சினையே அதற்கு காரணமாகியது.கடந்த காலங்களில் உரம் இல்லாத காரணத்தினால் முழுமையான விவசாயத் துறையும் பெரும் வீழ்ச்சிக்குள்ளானது. அதனையடுத்து அனைத்து யோசனைகளையும் கவனத்திற் கொண்டு உரம் விநியோகிப்பதில் புதிய முறைமை ஒன்றை உருவாக்குவதற்காக நாம் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம்.அத்துடன் தேயிலை சபை மூலம் 2000 மில்லியன் ரூபாவை 2025 ஆம் ஆண்டுக்கான உர நிவாரணத்துக்காக ஒதுக்கியுள்ளோம்.இதேவேளை பெருந்தோட்ட பகுதிகளில் அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வசிப்பிடங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 66.9 சதவீதமானவை மண்சரிவு அபாயத்துக்கு உட்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய, அந்த 5 ஆயிரத்து 64 வீடுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 97 வீடுகளும் அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.2014 ஆம் ஆண்டில் மீரியபெத்தை மண்சரிவில் 36 பேர் கொல்லப்பட்டனர்.குறித்த பகுதி மண்சரிவு அபாயமுள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டு அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவித்திருந்த அரசாங்கம் அவர்கள் வசிப்பதற்கான மாற்றிடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.அந்தவகையில், பெருந்தோட்டத் துறையில் அதிக மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசித்துவரும் 2125 குடும்பங்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி,ஜனாதிபதி தலைமையில் தலா 32 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளும் 10 பேர்ச் காணியும் வழங்கும் நிகழ்வொன்று பண்டாரவளையில் நடத்தப்படவுள்ளது.அதேநேரம், பதுளையில் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.அதேநேரம், பதுளை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 15 இடங்கள் பாதுகாப்பு வேலி இடுதல் உள்ளிட்ட பணிகள் மூலம் 150 மில்லியன் ரூபாய் செலவில் மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.