மட்டக்களப்பு மக்கள் காட்டு யானைப்பிரச்சினைக்கு தீர்வின்றி அவதியுறும் நிலமை காணப்படுகின்றது
பல உயிர்கள் யானையால் பறிபோவதாக கவலையடைகின்றனர்
யானைகளின் அட்டகாசம் காரணமாக, கிராமப்புற மக்கள் நாளுக்கு நாள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். விவசாய நிலங்கள் சேதமடைதல், வீடுகள் தாக்குதல், வாழ்வாதாரம் வீழ்ச்சி என பல்வேறு சிக்கல்களில் மக்கள் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு மகிழ வெட்டுவான் கற்குடா பகுதியில் காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்த பசுபதி ரவிச்சந்திரன் இல்லத்திற்கு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சென்றிருந்தார்
அங்கு சென்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு யானை தாக்கிய இடங்களையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
காட்டு யானைப்பிரச்சினைக்கு தீர்வின்றி அவதியுறும்: மட்டக்களப்பு மக்கள் -நேரில் சென்று பார்வையிட்ட -சாணக்கியன் எம்.பி மட்டக்களப்பு மக்கள் காட்டு யானைப்பிரச்சினைக்கு தீர்வின்றி அவதியுறும் நிலமை காணப்படுகின்றதுபல உயிர்கள் யானையால் பறிபோவதாக கவலையடைகின்றனர்யானைகளின் அட்டகாசம் காரணமாக, கிராமப்புற மக்கள் நாளுக்கு நாள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். விவசாய நிலங்கள் சேதமடைதல், வீடுகள் தாக்குதல், வாழ்வாதாரம் வீழ்ச்சி என பல்வேறு சிக்கல்களில் மக்கள் சிக்கியுள்ளனர்.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு மகிழ வெட்டுவான் கற்குடா பகுதியில் காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்த பசுபதி ரவிச்சந்திரன் இல்லத்திற்கு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சென்றிருந்தார்அங்கு சென்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு யானை தாக்கிய இடங்களையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது