மஞ்சள் கடவைக் கோட்டில் முட்டும் வகையில் காரை நிறுத்தியது எனது பிழை தான். அதற்காக நான் அபராதம் கட்டவும் தயார். கைது செய்ய வேண்டுமெனில் அதனையும் செய்யுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காணப்படும் பேருந்து நிறுத்தும் பகுதியில் உள்ள மஞ்சள் கோட்டில் இராமநாதன் அர்ச்சுனா தனது காரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
இதன்போது காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என அங்கு கடமையிலிருந்த பொலிஸார் கேட்டுள்ளனர். அதற்கு அவர் 'காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது, மடையன்' என திட்டடிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியைப் பார்வையிட்ட பின்னரே இராமநாதன் அர்ச்சுனா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் கோட்டில் வாகனம் நிறுத்தியது பிழை தான்; அபராதம் செலுத்தவும் தயார் கைதாகவும் தயார் - அர்ச்சுனா பகிரங்கம் மஞ்சள் கடவைக் கோட்டில் முட்டும் வகையில் காரை நிறுத்தியது எனது பிழை தான். அதற்காக நான் அபராதம் கட்டவும் தயார். கைது செய்ய வேண்டுமெனில் அதனையும் செய்யுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காணப்படும் பேருந்து நிறுத்தும் பகுதியில் உள்ள மஞ்சள் கோட்டில் இராமநாதன் அர்ச்சுனா தனது காரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். இதன்போது காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என அங்கு கடமையிலிருந்த பொலிஸார் கேட்டுள்ளனர். அதற்கு அவர் 'காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது, மடையன்' என திட்டடிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியைப் பார்வையிட்ட பின்னரே இராமநாதன் அர்ச்சுனா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.