• Sep 24 2025

தொழிற்சங்கங்களை அடக்க அரசு முயற்சித்தால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்! - நாமல் எச்சரிக்கை

Chithra / Sep 23rd 2025, 8:03 pm
image

 

தொழிற்சங்கத்தினரை பலவந்தமான அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.1889 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற  தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. இனியும் கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிக்க முடியாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினீர்கள். இந்த வாக்குறுதிகள்  நிறைவேற்றப்பட்டுள்ளதா, மக்கள் பயனடைந்துள்ளார்களா?

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கோஷத்துடன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இன்று மக்கள் வளப்படுத்தப்படவில்லை. மாறாக 159 பேரும் கோடிஸ்வரர்களானமை இன்று பேசுபொருளாகியுள்ளது.

75 வருட சாபத்தினால் செல்வந்தர் ஆகமுடியாதோர் கடந்த வருடத்தில் செல்வந்தர்களாகியுள்ளனர்.

அதேநேரம், கடந்த ஒரு வருடத்தில் பொருளாதாரம் வீழ்ச்சி பாதையில் சென்றுள்ளது

காய்கறி செய்கை 3.6 சதவீதத்தினால் குறைந்ததுடன் கிழங்கு, வெங்காயம் விளைச்சல் அதிகரிக்கும் காலத்தில் அவற்றை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரம், கடற்றொழில் செயற்பாடும் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது, இது குறித்து அவதானம் செலுத்தாவிடின் வெளிநாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும்.

அத்துடன், இறப்பர் தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.இதுவே ஒரு வருடத்தில் அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  இன்று போராட்டத்தில் ஈடுகிறார்கள்.

கடந்த அரசாங்கம் இயற்றிய மின்சார சபை சட்டத்தை இரத்துச் செய்வதாக மின்சார  சேவையாளர்களுக்கு வாக்குறுதிளித்தீர்கள். அவர்களும் உங்களுக்கு ஆதரவளித்தார்கள்.ஆனால் இன்று  அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களையே செயற்படுத்த முனைகின்றீர்கள்.

தொழிற்சங்கத்தினரை பலவந்தமான அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். 1889 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது. காலம் மாறிட்டது. என தெரிவித்தார். 


தொழிற்சங்கங்களை அடக்க அரசு முயற்சித்தால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் - நாமல் எச்சரிக்கை  தொழிற்சங்கத்தினரை பலவந்தமான அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.1889 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.பாராளுமன்றத்தில்  நடைபெற்ற  தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. இனியும் கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிக்க முடியாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினீர்கள். இந்த வாக்குறுதிகள்  நிறைவேற்றப்பட்டுள்ளதா, மக்கள் பயனடைந்துள்ளார்களாவளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கோஷத்துடன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இன்று மக்கள் வளப்படுத்தப்படவில்லை. மாறாக 159 பேரும் கோடிஸ்வரர்களானமை இன்று பேசுபொருளாகியுள்ளது.75 வருட சாபத்தினால் செல்வந்தர் ஆகமுடியாதோர் கடந்த வருடத்தில் செல்வந்தர்களாகியுள்ளனர்.அதேநேரம், கடந்த ஒரு வருடத்தில் பொருளாதாரம் வீழ்ச்சி பாதையில் சென்றுள்ளதுகாய்கறி செய்கை 3.6 சதவீதத்தினால் குறைந்ததுடன் கிழங்கு, வெங்காயம் விளைச்சல் அதிகரிக்கும் காலத்தில் அவற்றை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதேநேரம், கடற்றொழில் செயற்பாடும் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது, இது குறித்து அவதானம் செலுத்தாவிடின் வெளிநாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும்.அத்துடன், இறப்பர் தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.இதுவே ஒரு வருடத்தில் அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.இலங்கை மின்சார சபை ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  இன்று போராட்டத்தில் ஈடுகிறார்கள்.கடந்த அரசாங்கம் இயற்றிய மின்சார சபை சட்டத்தை இரத்துச் செய்வதாக மின்சார  சேவையாளர்களுக்கு வாக்குறுதிளித்தீர்கள். அவர்களும் உங்களுக்கு ஆதரவளித்தார்கள்.ஆனால் இன்று  அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களையே செயற்படுத்த முனைகின்றீர்கள்.தொழிற்சங்கத்தினரை பலவந்தமான அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். 1889 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது. காலம் மாறிட்டது. என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement