• May 29 2025

திருகோணமலை மாநகர சபையின் மேயரை அறிவித்தது தமிழரசுக்கட்சி

Chithra / May 28th 2025, 1:52 pm
image

 

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.

திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேயராக பரிந்துரை செய்யப்பட்ட கந்தசாமி செல்வராசா கருத்து தெரிவிக்கையில்  

என்னை மேயராக பரிந்துரை செய்து  தெரிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு எனது வட்டார மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

அத்துடன் மாநகர மேயர் பதவியின் பின் திருகோணமலை நகர அபிவிருத்திக்காக சமமான வள பங்கீடு மூலமாக அபிவிருத்தி திட்டங்களை திறம்பட முன்னெடுக்கவும் அனுபவம் மூலமாக  எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் எனது சேவைக் காலத்தின் போது முன்னெடுப்பேன் என்றார்


திருகோணமலை மாநகர சபையின் மேயரை அறிவித்தது தமிழரசுக்கட்சி  திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.மேயராக பரிந்துரை செய்யப்பட்ட கந்தசாமி செல்வராசா கருத்து தெரிவிக்கையில்  என்னை மேயராக பரிந்துரை செய்து  தெரிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு எனது வட்டார மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.அத்துடன் மாநகர மேயர் பதவியின் பின் திருகோணமலை நகர அபிவிருத்திக்காக சமமான வள பங்கீடு மூலமாக அபிவிருத்தி திட்டங்களை திறம்பட முன்னெடுக்கவும் அனுபவம் மூலமாக  எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் எனது சேவைக் காலத்தின் போது முன்னெடுப்பேன் என்றார்

Advertisement

Advertisement

Advertisement