• Jul 03 2025

ஆலயத்தில் பறிபோன சிறுவனின் உயிர்; மட்டக்களப்பில் நடந்த துயர சம்பவம்

Chithra / Jul 3rd 2025, 8:00 am
image

 

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம்  நேற்று காலை  இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயதான சென்தில்குமரன் கியோபன் என தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது 

முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உச்சவம் இடம்பெற்றுவரும் நிலையில், ஆனி உத்தர நாளான நேற்று  அதிகாலைவேளை விஷேட பூசை இடம்பெற்றது.

இதன்போது, குறித்த சிறுவன் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி விட்டு அதனருகில் நின்றபோது அருகில் இருந்த மின்குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின் வடத்திலிருந்த மின் ஒழுக்கு காரணமாக சிறுவனுக்கு மின்சாரம் தாக்கிய நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இடத்திற்கு சென்ற கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் நாகதம்பிரான் ஆலயத்தில் சிறுவயது முதல் தொண்டாற்றி வருவதுடன் நல் ஒழுக்கமுள்ள இறை பக்தியுள்ள ஒருவர் என்றும் இவரது துரதிஷ்டவசமான இழப்பு ஆலய நிருவாகத்தையும் கிராமப் பொது மக்களிடையேயும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஆலயத்தில் பறிபோன சிறுவனின் உயிர்; மட்டக்களப்பில் நடந்த துயர சம்பவம்  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம்  நேற்று காலை  இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயதான சென்தில்குமரன் கியோபன் என தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உச்சவம் இடம்பெற்றுவரும் நிலையில், ஆனி உத்தர நாளான நேற்று  அதிகாலைவேளை விஷேட பூசை இடம்பெற்றது.இதன்போது, குறித்த சிறுவன் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி விட்டு அதனருகில் நின்றபோது அருகில் இருந்த மின்குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின் வடத்திலிருந்த மின் ஒழுக்கு காரணமாக சிறுவனுக்கு மின்சாரம் தாக்கிய நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.குறித்த இடத்திற்கு சென்ற கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த சிறுவன் நாகதம்பிரான் ஆலயத்தில் சிறுவயது முதல் தொண்டாற்றி வருவதுடன் நல் ஒழுக்கமுள்ள இறை பக்தியுள்ள ஒருவர் என்றும் இவரது துரதிஷ்டவசமான இழப்பு ஆலய நிருவாகத்தையும் கிராமப் பொது மக்களிடையேயும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement