அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற உண்மையைச் சொல்லும் காப்பியங்களை, இந்தத் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சிலப்பதிகார விழாக்களை நடத்தும் அகில இலங்கை இளங்கோ கழகத்தை பாராட்டுவதுடன் இந்தப் பணிகளை தொய்வின்றி எடுத்துச் செல்லவும் அவர்களை வேண்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் 'சிலப்பதிகார விழா 2025' துன்னாலை வடிவேலர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று சனிக்கிழமை (24.05.2025) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றன.
ஆளுநர் தனது தலைமை உரையில், எங்கள் தமிழ் மொழி, பெரும் காப்பியங்களைப்படைத்த கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் ஆகியோரால் புகழ்பெற்றது. ஒவ்வொரு காப்பியங்களும், திருக்குறளும் எங்கள் வாழ்வின் எக்காலத்துக்கும் தேவையான விடயங்களை சொல்லியிருக்கின்றன.
இளங்கோ அடிகளார் அறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சிலப்பதிகாரத்தை படைத்திருக்கின்றார். அறம் என்பதை இன்று பலர் மறந்து செயற்படுகின்றனர். சிலர் அறத்தை தெரிந்திருந்தும் அதன்வழி ஒழுகுவதில்லை.
மனிதன் சந்தோசமாக வாழ்வதற்கே பிறந்தான். அந்தச் சந்தோசம் என்பது பணம், பொருள் சேர்ப்பதில் இல்லை. அறத்தின் வழி நடந்து பிறருக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோசம் தங்கியிருக்கின்றது. நாம் உதவி செய்யும்போது எமக்குத் தெரியாமலே பல கரங்கள் எங்களுக்கு உதவி செய்யும். இதுதான் இயற்கையின் நியதி.
சிலப்பதிகாரம் மூன்று முக்கிய விடயங்களை உணர்த்தியிருக்கின்றது.
ஊழ்வினை உறுத்தி வந்து ஊற்றும் என்பது அதில் முதலாவது. நாம் எதைச் செய்கின்றோமோ, எதை விதைக்கின்றோமோ அதுவே எமக்குத் திரும்பக் கிடைக்கும். இது தொடர்பில் நாம் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றோம். ஆனால், நிச்சயம் ஒரு நாள் இவற்றுக்கு விடைகிடைக்கும்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது இரண்டாவது. இன்றும் அப்படித்தான். அரசியல் செய்வோர் தவறிழைத்தால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர் என்பது மூன்றாவது. பெண்கள் புறக்கணிக்கப்படும் நிலை இன்றும் இருக்கின்றது. அன்று எப்படி இருந்திருக்கும். ஆனால் பத்தினிப் பெண்களை மற்றையோர் வணங்குவர் என்பது இளங்கோ அடிகளார் சொல்லிச் சென்றிருக்கும் உண்மை.
காப்பியங்கள் எங்களுக்கு வழிகாட்டி. இதனை எடுத்துச் சொல்வதன் மூலம் அவர் சொல்லும் அறக் கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி பின்பற்றச் செய்யவேண்டும். இந்த காப்பியங்கள் - நூல்கள் பற்றி பலருக்குத் தெரியாது. இவ்வாறான விழாக்கள் இதை எடுத்துச் சொல்கின்றன.
எனவே அகில இலங்கை கம்பன் கழகமாக இருக்கட்டும், அகில இலங்கை இளங்கோ கழகமாக இருக்கட்டும் அவை இந்தப் பணிகளைத் தொடரவேண்டும், என்றார் ஆளுநர்.
இதனைத் தொடர்ந்து கவியரங்கு, கதாப்பிரசங்கம் மற்றும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையிலான இலக்கிய ஆணைக்குழு என்பனவும் நடைபெற்றன
அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம்என்ற உண்மையை இன்றைய காலத்திற்கு எடுத்துக்காட்டுவதை பாராட்டிய வடமாகாண ஆளுநர் அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற உண்மையைச் சொல்லும் காப்பியங்களை, இந்தத் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சிலப்பதிகார விழாக்களை நடத்தும் அகில இலங்கை இளங்கோ கழகத்தை பாராட்டுவதுடன் இந்தப் பணிகளை தொய்வின்றி எடுத்துச் செல்லவும் அவர்களை வேண்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் 'சிலப்பதிகார விழா 2025' துன்னாலை வடிவேலர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று சனிக்கிழமை (24.05.2025) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றன. ஆளுநர் தனது தலைமை உரையில், எங்கள் தமிழ் மொழி, பெரும் காப்பியங்களைப்படைத்த கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் ஆகியோரால் புகழ்பெற்றது. ஒவ்வொரு காப்பியங்களும், திருக்குறளும் எங்கள் வாழ்வின் எக்காலத்துக்கும் தேவையான விடயங்களை சொல்லியிருக்கின்றன. இளங்கோ அடிகளார் அறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சிலப்பதிகாரத்தை படைத்திருக்கின்றார். அறம் என்பதை இன்று பலர் மறந்து செயற்படுகின்றனர். சிலர் அறத்தை தெரிந்திருந்தும் அதன்வழி ஒழுகுவதில்லை. மனிதன் சந்தோசமாக வாழ்வதற்கே பிறந்தான். அந்தச் சந்தோசம் என்பது பணம், பொருள் சேர்ப்பதில் இல்லை. அறத்தின் வழி நடந்து பிறருக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோசம் தங்கியிருக்கின்றது. நாம் உதவி செய்யும்போது எமக்குத் தெரியாமலே பல கரங்கள் எங்களுக்கு உதவி செய்யும். இதுதான் இயற்கையின் நியதி. சிலப்பதிகாரம் மூன்று முக்கிய விடயங்களை உணர்த்தியிருக்கின்றது. ஊழ்வினை உறுத்தி வந்து ஊற்றும் என்பது அதில் முதலாவது. நாம் எதைச் செய்கின்றோமோ, எதை விதைக்கின்றோமோ அதுவே எமக்குத் திரும்பக் கிடைக்கும். இது தொடர்பில் நாம் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றோம். ஆனால், நிச்சயம் ஒரு நாள் இவற்றுக்கு விடைகிடைக்கும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது இரண்டாவது. இன்றும் அப்படித்தான். அரசியல் செய்வோர் தவறிழைத்தால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர் என்பது மூன்றாவது. பெண்கள் புறக்கணிக்கப்படும் நிலை இன்றும் இருக்கின்றது. அன்று எப்படி இருந்திருக்கும். ஆனால் பத்தினிப் பெண்களை மற்றையோர் வணங்குவர் என்பது இளங்கோ அடிகளார் சொல்லிச் சென்றிருக்கும் உண்மை. காப்பியங்கள் எங்களுக்கு வழிகாட்டி. இதனை எடுத்துச் சொல்வதன் மூலம் அவர் சொல்லும் அறக் கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி பின்பற்றச் செய்யவேண்டும். இந்த காப்பியங்கள் - நூல்கள் பற்றி பலருக்குத் தெரியாது. இவ்வாறான விழாக்கள் இதை எடுத்துச் சொல்கின்றன. எனவே அகில இலங்கை கம்பன் கழகமாக இருக்கட்டும், அகில இலங்கை இளங்கோ கழகமாக இருக்கட்டும் அவை இந்தப் பணிகளைத் தொடரவேண்டும், என்றார் ஆளுநர். இதனைத் தொடர்ந்து கவியரங்கு, கதாப்பிரசங்கம் மற்றும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையிலான இலக்கிய ஆணைக்குழு என்பனவும் நடைபெற்றன