• May 26 2025

சிறப்பாக இடம்பெற்ற, புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் இ. இளங்கோவனின் மணிவிழா நிகழ்வும், சேவைநலன் பாராட்டு விழாவும்

Thansita / May 25th 2025, 9:02 pm
image

புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் தலைவரும், முன்னாள் வடமாகாண பிரதம செயலாளருமான  இலட்சுமணன் இளங்கோவனின்  மணிவிழா நிகழ்வும், சேவைநலன் பாராட்டு விழாவும் இன்றைய தினம் புங்குடுதீவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வானது புங்குடுதீவு வாழ் மக்களின்  பங்களிப்புடன் நடைபெற்றது.

மண்ணில் பிறப்பது மாத்திரமல்ல வாழும் காலம் வரை மண்ணுக்காக உழைப்பதும் பெரிது என்ற கருப்பொருளில்  இவரது சேவை அளப்பெரியது என்பதை முன்னிறுத்தி இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

 



இவரது சேவையை பாராட்டும் விதத்தில்  இந்த நிகழ்விற்கான பல்வேறு பட்ட உதவிகளை  குறிப்பாக  கனடாவிலிருந்து  பொன் சுந்தரலிங்கம் , தம்பிப்பிள்ளை இரத்தினராசா , குணபாலசிங்கம் தீபன்,,ஆறுமுகம் கிருபா, செல்லத்துரை சபாரத்தினம், பாலசிங்கம் சிறிநிகேதன் மற்றும் சுவிசிலிருந்து இராசமாணிக்கம் இரவீந்திரன், சொக்கலிங்கம் ரஞ்சன் ஆகியோர் வழங்கியுள்ளனர். 



இவ்விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் ந.வேதநாயகன் உட்பட அதிகாரிகள், பல அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் திரு.திருமதி இளங்கோவன் கிருபாஹரி தம்பதிகளுக்கு பல பரிசில்களை  வழங்கி கௌரவித்தனர். 

நிர்வாகிகளுக்கு இருக்கவேண்டிய சிறந்த பண்பை கொண்டவராகவும் உடனடியாக தீர்மானம் எடுக்கும் பண்புடையவராகவும் காணப்படும் இவரின் இத்தகைய சேவையை பாராட்டும் விதத்தில் உலக வாழ் தமிழ் மக்களின் பங்கேற்போடு குறித்த நிகழ்வு இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது


சிறப்பாக இடம்பெற்ற, புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் இ. இளங்கோவனின் மணிவிழா நிகழ்வும், சேவைநலன் பாராட்டு விழாவும் புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் தலைவரும், முன்னாள் வடமாகாண பிரதம செயலாளருமான  இலட்சுமணன் இளங்கோவனின்  மணிவிழா நிகழ்வும், சேவைநலன் பாராட்டு விழாவும் இன்றைய தினம் புங்குடுதீவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வானது புங்குடுதீவு வாழ் மக்களின்  பங்களிப்புடன் நடைபெற்றது.மண்ணில் பிறப்பது மாத்திரமல்ல வாழும் காலம் வரை மண்ணுக்காக உழைப்பதும் பெரிது என்ற கருப்பொருளில்  இவரது சேவை அளப்பெரியது என்பதை முன்னிறுத்தி இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இவரது சேவையை பாராட்டும் விதத்தில்  இந்த நிகழ்விற்கான பல்வேறு பட்ட உதவிகளை  குறிப்பாக  கனடாவிலிருந்து  பொன் சுந்தரலிங்கம் , தம்பிப்பிள்ளை இரத்தினராசா , குணபாலசிங்கம் தீபன்,,ஆறுமுகம் கிருபா, செல்லத்துரை சபாரத்தினம், பாலசிங்கம் சிறிநிகேதன் மற்றும் சுவிசிலிருந்து இராசமாணிக்கம் இரவீந்திரன், சொக்கலிங்கம் ரஞ்சன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இவ்விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் ந.வேதநாயகன் உட்பட அதிகாரிகள், பல அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் திரு.திருமதி இளங்கோவன் கிருபாஹரி தம்பதிகளுக்கு பல பரிசில்களை  வழங்கி கௌரவித்தனர். நிர்வாகிகளுக்கு இருக்கவேண்டிய சிறந்த பண்பை கொண்டவராகவும் உடனடியாக தீர்மானம் எடுக்கும் பண்புடையவராகவும் காணப்படும் இவரின் இத்தகைய சேவையை பாராட்டும் விதத்தில் உலக வாழ் தமிழ் மக்களின் பங்கேற்போடு குறித்த நிகழ்வு இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement