• May 29 2025

கொழும்பில் துப்பாக்கிச் சூடு; பிரதான துப்பாக்கிதாரியை கைது செய்ய உதவிகோரும் பொலிஸார்

Chithra / May 27th 2025, 3:33 pm
image


கொழும்பு - கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியை கைது செய்ய  கொட்டாஞ்சேனை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கொட்டாஞ்சேனை , சுமித்திராராம மாவத்தை பகுதிக்கு கடந்த 16ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வீடொன்றுக்கு அருகில் இருந்த பெண் உட்பட இருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

42 வயதுடைய நபரும் 70 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியின் புகைப்படம் ஒன்று பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதான துப்பாக்கிதாரி 30 முதல் 35 வயது மதிக்கத்தக்கவர், 05அடி 09 அங்குலம் உயரமுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின்  071 8591571,  071 8596386 அல்லது 074 0253623 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


கொழும்பில் துப்பாக்கிச் சூடு; பிரதான துப்பாக்கிதாரியை கைது செய்ய உதவிகோரும் பொலிஸார் கொழும்பு - கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியை கைது செய்ய  கொட்டாஞ்சேனை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொட்டாஞ்சேனை , சுமித்திராராம மாவத்தை பகுதிக்கு கடந்த 16ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வீடொன்றுக்கு அருகில் இருந்த பெண் உட்பட இருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.42 வயதுடைய நபரும் 70 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியின் புகைப்படம் ஒன்று பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.பிரதான துப்பாக்கிதாரி 30 முதல் 35 வயது மதிக்கத்தக்கவர், 05அடி 09 அங்குலம் உயரமுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின்  071 8591571,  071 8596386 அல்லது 074 0253623 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement