• May 28 2025

ராஜகிரிய பகுதியில் திடீர் தீ விபத்து! 4 தீயணைப்பு வாகனங்கள் களத்தில்

Chithra / May 27th 2025, 3:22 pm
image


கொழும்பு - இராஜகிரிய பகுதியில் உள்ள பாதுகாப்பு உற்பத்தி பொருட்கள் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகக் கட்டடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை மதியம்  ஏற்பட்டுள்ளது.

கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ராஜகிரிய பகுதியில் திடீர் தீ விபத்து 4 தீயணைப்பு வாகனங்கள் களத்தில் கொழும்பு - இராஜகிரிய பகுதியில் உள்ள பாதுகாப்பு உற்பத்தி பொருட்கள் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகக் கட்டடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை மதியம்  ஏற்பட்டுள்ளது.கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement