• Sep 01 2025

நாட்டை விட்டு தப்பிஓடிய இஷாரா செவ்வந்தி - கெஹல்பத்தர பத்மே சிஐடிக்கு கொடுத்த தகவல்

Chithra / Sep 1st 2025, 2:06 pm
image

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றின் பிரதிவாதி கூண்டில் வைத்து கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு  திணைக்களத்திற்கு தெரியவந்துள்ளது. 

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரிடம் மேற்கொண்ட விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

இலங்கை பொலிஸார், இந்தோனேசியாவின் ஜகார்த்தா பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் உள்ளிட்டோர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்தக் குழுவிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாகவும் பல விடயங்கள் தெரியவந்துள்ளன. 

கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண், கொலைக்குப் பிறகு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்த 28 கையடக்க தொலைபேசிகளை இந்தோனேசிய பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

பின்னர் இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகள் குறித்த கையடக்க தொலைபேசிகளை இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டை விட்டு தப்பிஓடிய இஷாரா செவ்வந்தி - கெஹல்பத்தர பத்மே சிஐடிக்கு கொடுத்த தகவல் பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றின் பிரதிவாதி கூண்டில் வைத்து கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு  திணைக்களத்திற்கு தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரிடம் மேற்கொண்ட விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இலங்கை பொலிஸார், இந்தோனேசியாவின் ஜகார்த்தா பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் உள்ளிட்டோர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் குழுவிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாகவும் பல விடயங்கள் தெரியவந்துள்ளன. கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண், கொலைக்குப் பிறகு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்த 28 கையடக்க தொலைபேசிகளை இந்தோனேசிய பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகள் குறித்த கையடக்க தொலைபேசிகளை இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement