• Jul 06 2025

மக்கள் வங்கிக்குள் புகுந்த காட்டு யானையால் பதற்றம்

Chithra / Jul 6th 2025, 3:56 pm
image



மதவாச்சி மக்கள் வங்கிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக தெரியவருகின்றது. 

மதவாச்சி நகருக்கு வந்த யானை, மன்னார் சாலையில் மதவாச்சி பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள மக்கள் வங்கிக்குள் புகுந்து, 

வங்கியின் பிரதான கண்ணாடி கதவை உடைத்து, வங்கி வளாகத்திற்குள் நுழைந்து அதன் கூரையை சேதப்படுத்தியுள்ளது.


யானை வங்கிக்குள் நுழைந்து அங்கு நடந்து சென்று, மீண்டும் வங்கியிலிருந்து வெளியே வந்து அருகிலுள்ள கோவிலுக்குள் புகுந்து, வாழைப்பழங்கள் மற்றும் பலாப்பழங்களை சாப்பிட்டதுடன், கோவில் தோட்டத்திற்குள்ளும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்குதலால் மக்கள் வங்கி கட்டடம் சேதமடைந்துள்ளதாகவும், வங்கியில் உள்ள பணம் மற்றும் பெட்டகத்தில் உள்ள தங்க பொருட்கள் உட்பட அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மக்கள் வங்கிக்குள் புகுந்த காட்டு யானையால் பதற்றம் மதவாச்சி மக்கள் வங்கிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக தெரியவருகின்றது. மதவாச்சி நகருக்கு வந்த யானை, மன்னார் சாலையில் மதவாச்சி பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள மக்கள் வங்கிக்குள் புகுந்து, வங்கியின் பிரதான கண்ணாடி கதவை உடைத்து, வங்கி வளாகத்திற்குள் நுழைந்து அதன் கூரையை சேதப்படுத்தியுள்ளது.யானை வங்கிக்குள் நுழைந்து அங்கு நடந்து சென்று, மீண்டும் வங்கியிலிருந்து வெளியே வந்து அருகிலுள்ள கோவிலுக்குள் புகுந்து, வாழைப்பழங்கள் மற்றும் பலாப்பழங்களை சாப்பிட்டதுடன், கோவில் தோட்டத்திற்குள்ளும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.யானை தாக்குதலால் மக்கள் வங்கி கட்டடம் சேதமடைந்துள்ளதாகவும், வங்கியில் உள்ள பணம் மற்றும் பெட்டகத்தில் உள்ள தங்க பொருட்கள் உட்பட அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement