• Jul 12 2025

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு புதிய கட்டட திறப்பு விழா!

shanuja / Jul 12th 2025, 6:14 pm
image

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு புதிய கட்டடத்தின் திறப்பு விழா இன்று (12) இடம்பெற்றது. 


இந்த புதிய கட்டடமானது, புலம்பெயர் தேசத்தில் வாழும் நயினாதீவு உறவுகள் மற்றும் ஜேர்மன் செஞ்சிலுவைச்சங்க வாறன்டோர்ப் கிளையின் நிதி பங்களிப்பில், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையுடன், இலங்கை கடற்படையின் கட்டுமான பணிகளில் அமைக்கப்பட்டுள்ளது. 


அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்.


நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா மற்றும் கருணைநாதன் இளங்குமரன், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு புதிய கட்டட திறப்பு விழா நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு புதிய கட்டடத்தின் திறப்பு விழா இன்று (12) இடம்பெற்றது. இந்த புதிய கட்டடமானது, புலம்பெயர் தேசத்தில் வாழும் நயினாதீவு உறவுகள் மற்றும் ஜேர்மன் செஞ்சிலுவைச்சங்க வாறன்டோர்ப் கிளையின் நிதி பங்களிப்பில், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையுடன், இலங்கை கடற்படையின் கட்டுமான பணிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்.நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா மற்றும் கருணைநாதன் இளங்குமரன், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement