• Jul 12 2025

பேருந்திற்கு குறுக்கே திடீரென சென்ற மோட்டார் சைக்கள் - சாகசமாக பேருந்தை செலுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி!

shanuja / Jul 12th 2025, 6:01 pm
image

பேருந்து ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென பேருந்திற்கு குறுக்கே நபரொருவர் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளார். 


குறித்த வீதியொன்றில் தனியார் பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென எதிர்பக்கத்திலிருந்து பேருந்திற்கு குறுக்கே நபரொருவர் மோட்டார் சைக்கிளுடன் பயணித்துள்ளார். 


அவ்வேளை பேருந்தின் சாரதி சாகசமாக பேருந்தை அங்குமிங்குமாக இயக்கி நடக்கவிருந்த பெரும் விபத்தைத் தடுத்துள்ளார். 


தனியார் பேருந்தில் ஒரு தொகை பயணிகள் இருந்த வேளையே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் வீதியில் திரும்பிப் பார்க்கமால் தன்னியக்கமாக பயணித்துள்ளார். 


குறித்த மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவரின் கவனயீனத்தால் பலரது உயிர் ஒரு நொடியில் கேள்விக்குறியாகியிருக்கும். எனினும் பேருந்து சாரதி சாகசமாக பேருந்தை செலுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். 


அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கும் எந்தவித சேதமுமில்லாமல் புத்திசாலித்தனமாக பேருந்தை இயக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி வெளிவந்து குறித்த தனியார் பேருந்து சாரதியின் புத்திசாலித்தனத்தை அனைவரையும் பாராட்டி நெகிழ்ந்துள்ளனர்.

பேருந்திற்கு குறுக்கே திடீரென சென்ற மோட்டார் சைக்கள் - சாகசமாக பேருந்தை செலுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி பேருந்து ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென பேருந்திற்கு குறுக்கே நபரொருவர் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளார். குறித்த வீதியொன்றில் தனியார் பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென எதிர்பக்கத்திலிருந்து பேருந்திற்கு குறுக்கே நபரொருவர் மோட்டார் சைக்கிளுடன் பயணித்துள்ளார். அவ்வேளை பேருந்தின் சாரதி சாகசமாக பேருந்தை அங்குமிங்குமாக இயக்கி நடக்கவிருந்த பெரும் விபத்தைத் தடுத்துள்ளார். தனியார் பேருந்தில் ஒரு தொகை பயணிகள் இருந்த வேளையே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் வீதியில் திரும்பிப் பார்க்கமால் தன்னியக்கமாக பயணித்துள்ளார். குறித்த மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவரின் கவனயீனத்தால் பலரது உயிர் ஒரு நொடியில் கேள்விக்குறியாகியிருக்கும். எனினும் பேருந்து சாரதி சாகசமாக பேருந்தை செலுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கும் எந்தவித சேதமுமில்லாமல் புத்திசாலித்தனமாக பேருந்தை இயக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி வெளிவந்து குறித்த தனியார் பேருந்து சாரதியின் புத்திசாலித்தனத்தை அனைவரையும் பாராட்டி நெகிழ்ந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement