• Jul 05 2025

கஹவத்தையில் இளைஞர் படுகொலை - விசாரணைகள் தீவிரம்!

shanuja / Jul 4th 2025, 10:55 pm
image

கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  விசாரணைகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளனர் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



நான்கு பேர் கொண்ட குழு ஒன்று வீட்டில் இருந்த இரண்டு இளைஞர்களை கடத்திச் சென்று துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் 22 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்குகள்  இன்று (04) இடம்பெற்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. 


இதன்போது, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சித்தபோது, கிராமவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர். 



இந்த நிலையில் இளைஞரின் படுகொலை தொடர்பாக டுபாயில் உள்ள அமில என்ற நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 


எனினும் கிராமவாசிகளால் குறித்த சந்தேகநபரான  அமிலவின் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேற்று (03) எரித்து அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சி.சி.ரி.வி காட்சிகள் மற்றும் தொலைபேசி பதிவுகள் உள்ளிட்ட பல தகவல்களை ஆய்வு செய்து சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


மேலும், இது தொடர்பாக இரண்டு நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கஹவத்தையில் இளைஞர் படுகொலை - விசாரணைகள் தீவிரம் கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  விசாரணைகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளனர் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு பேர் கொண்ட குழு ஒன்று வீட்டில் இருந்த இரண்டு இளைஞர்களை கடத்திச் சென்று துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் 22 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்குகள்  இன்று (04) இடம்பெற்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சித்தபோது, கிராமவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர். இந்த நிலையில் இளைஞரின் படுகொலை தொடர்பாக டுபாயில் உள்ள அமில என்ற நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் கிராமவாசிகளால் குறித்த சந்தேகநபரான  அமிலவின் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேற்று (03) எரித்து அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சி.சி.ரி.வி காட்சிகள் மற்றும் தொலைபேசி பதிவுகள் உள்ளிட்ட பல தகவல்களை ஆய்வு செய்து சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக இரண்டு நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement