அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரச நிதியை, முறைகேடாக பயன்படுத்தியதற்காக அறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டியவில் இயங்கும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில், எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையால் அங்கீகரிக்கப்பட்ட 77 திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பிலேயே குறித்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், உள்ளூர் விவசாய சங்கங்கள் மூலம் செயற்படுத்தப்படவிருந்த இந்தத் திட்டங்களுக்கு, 70 மில்லியன் ரூபாக்களுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும், அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் 15 திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரச நிதியில் முறைகேடு - அறுவர் கைது அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரச நிதியை, முறைகேடாக பயன்படுத்தியதற்காக அறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டியவில் இயங்கும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில், எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையால் அங்கீகரிக்கப்பட்ட 77 திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பிலேயே குறித்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், உள்ளூர் விவசாய சங்கங்கள் மூலம் செயற்படுத்தப்படவிருந்த இந்தத் திட்டங்களுக்கு, 70 மில்லியன் ரூபாக்களுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் 15 திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.