• Dec 17 2025

இலங்கையில் அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்கள்

Chithra / Dec 16th 2025, 3:36 pm
image

 

இலங்கையில் எயிட்ஸ் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. 


கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 6% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எயிட்ஸ் பாதிப்பினால் சுமார் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 


தொற்று ஏற்பட்டவர்களில் ஆண்களே அதிகம். 


மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஏனையோர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


எனினும் எயிட்ஸ் பாதிப்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பாதிப்பைக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது. 

இலங்கையில் அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்கள்  இலங்கையில் எயிட்ஸ் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 6% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எயிட்ஸ் பாதிப்பினால் சுமார் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று ஏற்பட்டவர்களில் ஆண்களே அதிகம். மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஏனையோர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எயிட்ஸ் பாதிப்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பாதிப்பைக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement