வவுனியா மாவட்டம் சார்பாக பாடசாலை மற்றும் மாகாண ரீதியான போட்டிகளில் பங்குபற்றி சாதித்த மாணவ, மாணவிகளினை கௌரவிக்கும் நிகழ்வானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
வடமாகாண கல்வித்துறை போட்டிகள் மற்றும் வடக்கு மாகாண விளையாட்டு விழாக்களில் பங்கு கொண்டு 04 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலத்தினை பெற்றமையினை கௌரவிக்கும் முகமாக குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
ஓமந்தை விளையாட்டு வளாக பொறுப்பதிகாரி எஸ்.தனுராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சரத் சந்திர மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் நா.கமலதாசன் மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி தே.கமலன், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
இதன்போது மாணவ, மாணவிகளிற்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீச்சல் போட்டியில் சாதித்த மாணவர்களிற்கான கௌரவிப்பு வவுனியா மாவட்டம் சார்பாக பாடசாலை மற்றும் மாகாண ரீதியான போட்டிகளில் பங்குபற்றி சாதித்த மாணவ, மாணவிகளினை கௌரவிக்கும் நிகழ்வானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.வடமாகாண கல்வித்துறை போட்டிகள் மற்றும் வடக்கு மாகாண விளையாட்டு விழாக்களில் பங்கு கொண்டு 04 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலத்தினை பெற்றமையினை கௌரவிக்கும் முகமாக குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.ஓமந்தை விளையாட்டு வளாக பொறுப்பதிகாரி எஸ்.தனுராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சரத் சந்திர மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் நா.கமலதாசன் மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி தே.கமலன், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.இதன்போது மாணவ, மாணவிகளிற்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.