• Dec 17 2025

லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான ஹயேஸ்; சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயம்!

shanuja / Dec 16th 2025, 1:41 pm
image

லொறியுடன் மோதி ஹயேஸ் விபத்திற்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்த விபத்து தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ - தஹஅமுன பிரதேசத்தில் 

நேற்று திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எல்லவிலிருந்து மிரிஸ்ஸ நோக்கி நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன்  பயணித்த  ஹயேஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் ஹயேஸ்  சாரதியும் பின்னால் பயணித்த நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்துள்ளனர்.


ஈரான் நாட்டைச் சேர்ந்த நான்கு சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹயேஸ்  சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான ஹயேஸ்; சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயம் லொறியுடன் மோதி ஹயேஸ் விபத்திற்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ - தஹஅமுன பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எல்லவிலிருந்து மிரிஸ்ஸ நோக்கி நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன்  பயணித்த  ஹயேஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் ஹயேஸ்  சாரதியும் பின்னால் பயணித்த நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்துள்ளனர்.ஈரான் நாட்டைச் சேர்ந்த நான்கு சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹயேஸ்  சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement