• Jul 12 2025

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு எதிராக- ஒழுக்காற்று நடவடிக்கை!

Thansita / Jun 18th 2025, 9:03 pm
image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரம் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் அனுப்பப்பட்ட  கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், இன்று மதியம் நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது கட்சியின் மிகத் தெளிவான அறிவுறுத்தலுக்கு மாறாக நீங்கள் நடுநிலை வகித்துள்ளீர்கள்.

ஆகையால் உடனடியாக அமுலுக்கு வரும்படியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து நீங்கள் இடை நிறுத்தப்படுகின்றீர்கள்.

தங்களது இந்த நடவடிக்கை சம்மந்தமான விளக்கம் ஏதும் இருப்பின் ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில் கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என்ற அடிப்படையிலும் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கமாக இல்லாவிட்டாலும் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவீர்கள் - என்றுள்ளது.


இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு எதிராக- ஒழுக்காற்று நடவடிக்கை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.இன்று இடம்பெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரம் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் அனுப்பப்பட்ட  கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்கடிதத்தில், இன்று மதியம் நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது கட்சியின் மிகத் தெளிவான அறிவுறுத்தலுக்கு மாறாக நீங்கள் நடுநிலை வகித்துள்ளீர்கள்.ஆகையால் உடனடியாக அமுலுக்கு வரும்படியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து நீங்கள் இடை நிறுத்தப்படுகின்றீர்கள்.தங்களது இந்த நடவடிக்கை சம்மந்தமான விளக்கம் ஏதும் இருப்பின் ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என்ற அடிப்படையிலும் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கமாக இல்லாவிட்டாலும் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவீர்கள் - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now