• Sep 07 2025

வடக்கு, கிழக்கில் நிலவும் காணி பிரச்சினை; இலங்கை அரசுக்கு உதவவுள்ள ஐக்கிய நாடுகள் சபை

Chithra / Sep 7th 2025, 9:20 am
image

 

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நீண்டகாலமாக நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திற்கு உதவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு புதிய திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோதல் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும் ஏராளமான உரிமைகோரல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. 

இந்தநிலையில், விவசாய அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவனங்களுடன் தாம் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.


வடக்கு, கிழக்கில் நிலவும் காணி பிரச்சினை; இலங்கை அரசுக்கு உதவவுள்ள ஐக்கிய நாடுகள் சபை  போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நீண்டகாலமாக நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திற்கு உதவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக ஒரு புதிய திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும் ஏராளமான உரிமைகோரல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்தநிலையில், விவசாய அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவனங்களுடன் தாம் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement