கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மூடப்பட்டு மீண்டும் 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
இதேவேளை ஊவா மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறக்க முடியாமைக்கு முக்கிய காரணம் போக்குவரத்து அசௌகரியங்கள் அல்லது நிவாரண முகாம்கள் இயங்குவதே ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பாடசாலைகளுக்கும் கிறிஸ்துமஸ் விடுமுறை - வெளியான புதிய தகவல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மூடப்பட்டு மீண்டும் 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன. இதேவேளை ஊவா மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறக்க முடியாமைக்கு முக்கிய காரணம் போக்குவரத்து அசௌகரியங்கள் அல்லது நிவாரண முகாம்கள் இயங்குவதே ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.