இரத்தினபுரி - பாணந்துறை வீதியில் இடங்கொட பகுதியில் நேற்று(27) மாலை பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற கெப் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் எபிடவல, கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, மேலதிக சிகிச்சைக்காக கிரியெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இவ் விபத்துடன் தொடர்புடைய கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாணந்துறையில் கெப் வாகனம் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு. இரத்தினபுரி - பாணந்துறை வீதியில் இடங்கொட பகுதியில் நேற்று(27) மாலை பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற கெப் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் எபிடவல, கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, மேலதிக சிகிச்சைக்காக கிரியெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.இவ் விபத்துடன் தொடர்புடைய கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.