போலந்து வெளியுறவு அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கையை வந்தடைந்தார்.
அவரை வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, போலந்து வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன், அவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையை வந்தடைந்தார் போலந்து அமைச்சர் போலந்து வெளியுறவு அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கையை வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் வரவேற்றனர்.இந்த விஜயத்தின் போது, போலந்து வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.அத்துடன், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன், அவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.