காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி எட்டு வயதுச் சிறுவனொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது.
திருகோணமலை, கோமரன்கடவெல அருகே இந்திகடுவெவ பிரதேசத்தில் நேற்று காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த சிறுவன் தனது தகப்பனாருடன் சைக்கிளில் பயணித்த நிலையில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன் போது சிறுவன் உயிரிழந்து, தகப்பனார் காயங்களுடன் தப்பித்துக் கொண்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கோமரன்கடவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காட்டு யானையின் தாக்குதலில் எட்டு வயதுச் சிறுவன் பலி; காயங்களுடன் தப்பிய தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி எட்டு வயதுச் சிறுவனொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது.திருகோணமலை, கோமரன்கடவெல அருகே இந்திகடுவெவ பிரதேசத்தில் நேற்று காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.குறித்த சிறுவன் தனது தகப்பனாருடன் சைக்கிளில் பயணித்த நிலையில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.இதன் போது சிறுவன் உயிரிழந்து, தகப்பனார் காயங்களுடன் தப்பித்துக் கொண்டுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கோமரன்கடவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.