• Sep 04 2025

மகிந்த தங்கியுள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க நடவடிக்கை

Chithra / Sep 4th 2025, 11:57 am
image


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. 

அரச உயர் அதிகாரிகளால் இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. 

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்ப்பாத்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் காலங்களில் சபாநாயகரிடம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மகிந்த தங்கியுள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அரச உயர் அதிகாரிகளால் இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்ப்பாத்துள்ளது.இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் காலங்களில் சபாநாயகரிடம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement