• Sep 04 2025

தேரில் பவனி வந்த துர்க்கை அம்மன்; அம்மனின் ஆசி பெற திரண்ட மக்கள்!

shanuja / Sep 4th 2025, 12:05 pm
image

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 


தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று சப்பறத்திருவிழா இடம்பெற்றிருந்தது. 


அதனைத் தொடர்ந்து இன்று(4) துர்க்கை அம்மனின் தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது. இன்று காலை விசேட பூசைகள் இடம்பெற்று அம்மனுக்கு அபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. 


அதனைத் தொடர்ந்து உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் தேரில் பவனி வருவதற்கு வெளியில் பிரவேசித்தார். 


பல்லாயிரக்கணக்கான மக்களின் அரோகரா கோஷத்துடன் அலங்கார வடிவில் துர்க்கை அம்மன் தேரில் பவனி வந்தார். 


அம்மன் தேரில் பவனி வரும் காட்சி கண்களைக் கவர்ந்து பக்தர்களைப் பரவசமடைய வைத்தது. 

துர்க்கை அம்மன் தேரில் வலம் வரும் காட்சியைப் பார்க்க பல பாகங்களிலிருந்தும் மக்கள் திரண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேரில் பவனி வந்த துர்க்கை அம்மன்; அம்மனின் ஆசி பெற திரண்ட மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று சப்பறத்திருவிழா இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று(4) துர்க்கை அம்மனின் தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது. இன்று காலை விசேட பூசைகள் இடம்பெற்று அம்மனுக்கு அபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் தேரில் பவனி வருவதற்கு வெளியில் பிரவேசித்தார். பல்லாயிரக்கணக்கான மக்களின் அரோகரா கோஷத்துடன் அலங்கார வடிவில் துர்க்கை அம்மன் தேரில் பவனி வந்தார். அம்மன் தேரில் பவனி வரும் காட்சி கண்களைக் கவர்ந்து பக்தர்களைப் பரவசமடைய வைத்தது. துர்க்கை அம்மன் தேரில் வலம் வரும் காட்சியைப் பார்க்க பல பாகங்களிலிருந்தும் மக்கள் திரண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement