உடற்பயிற்சி போட்டியில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்ற யா/புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பானது இன்று (4) மிக சிறப்பாக நடைபெற்றது.
மங்கள வாத்தியங்கள் முழங்க, விருந்தினர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக இருந்து பாடசாலைவரை அழைத்து வரப்பட்டனர். பின்னர் தேசியக் கொடியேற்றல், பாடசாலை கொடியேற்றல் என்பன இடம்பெற்றன.
அதன்பின்னர் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து உடற்பயிற்சி போட்டியில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புகள், பயிற்றுவித்த ஆசிரியருக்கான கௌரவிப்புகள் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
கல்லூரியின் முதல்வர் சின்னத்தம்பி திரிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனும், சிறப்பு விருந்தினராக யாழ். கல்வி வலய பணிப்பாளர் மாலதி முகுந்தனும் கலந்து சிறப்பித்துடன், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோம் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கான கௌரவிப்பு உடற்பயிற்சி போட்டியில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்ற யா/புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பானது இன்று (4) மிக சிறப்பாக நடைபெற்றது.மங்கள வாத்தியங்கள் முழங்க, விருந்தினர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக இருந்து பாடசாலைவரை அழைத்து வரப்பட்டனர். பின்னர் தேசியக் கொடியேற்றல், பாடசாலை கொடியேற்றல் என்பன இடம்பெற்றன.அதன்பின்னர் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.அதனைத் தொடர்ந்து உடற்பயிற்சி போட்டியில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புகள், பயிற்றுவித்த ஆசிரியருக்கான கௌரவிப்புகள் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.கல்லூரியின் முதல்வர் சின்னத்தம்பி திரிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனும், சிறப்பு விருந்தினராக யாழ். கல்வி வலய பணிப்பாளர் மாலதி முகுந்தனும் கலந்து சிறப்பித்துடன், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோம் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.