• Sep 04 2025

அநுரவை வீட்டுக்கு அனுப்ப எந்தவொரு சக்திக்கும் ஆதரவளிக்கத் தயார்! சாமர சம்பத் பகிரங்கம்

Chithra / Sep 4th 2025, 3:47 pm
image

தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய சக்தியொன்றை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காக எந்தவொரு சக்திக்கும் ஆதரவளிக்கத் தயார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து புதிய அணியொன்றை உருவாக்க வேண்டும். அதன் மூலம் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும்.

அவ்வாறான ஒரு அரசியல் அணி ஏற்பட்டால் அதன் மிதிபலகையில் தொங்கிக் கொள்ள நானும் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுரவை வீட்டுக்கு அனுப்ப எந்தவொரு சக்திக்கும் ஆதரவளிக்கத் தயார் சாமர சம்பத் பகிரங்கம் தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய சக்தியொன்றை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் வலியுறுத்தியுள்ளார்.நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காக எந்தவொரு சக்திக்கும் ஆதரவளிக்கத் தயார்.ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து புதிய அணியொன்றை உருவாக்க வேண்டும். அதன் மூலம் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும்.அவ்வாறான ஒரு அரசியல் அணி ஏற்பட்டால் அதன் மிதிபலகையில் தொங்கிக் கொள்ள நானும் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement