செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 30 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 10 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையானது மிகவும் சிறிய பாடசாலையாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இந்தப் பாடசாலைக்கு போட்டியாக பெரிய பாடசாலைகள் காணப்பட்டதால் மாணவர்கள் அங்கே செல்வதால் குறித்த பாடசாலைக்கு மாணவர்களை உள்ளீர்ப்பது சிரமமாக இருந்துள்ளது.
தற்போது கண்டுள்ள வளர்ச்சியால் போட்டி போட்டுக் கொண்டு இந்த பாடசாலையில் மாணவர்களை சேர்ப்பதற்கு பெற்றோர் மும்முரம் காட்டுவதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை சாதனை செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 30 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 10 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.குறித்த பாடசாலையானது மிகவும் சிறிய பாடசாலையாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இந்தப் பாடசாலைக்கு போட்டியாக பெரிய பாடசாலைகள் காணப்பட்டதால் மாணவர்கள் அங்கே செல்வதால் குறித்த பாடசாலைக்கு மாணவர்களை உள்ளீர்ப்பது சிரமமாக இருந்துள்ளது. தற்போது கண்டுள்ள வளர்ச்சியால் போட்டி போட்டுக் கொண்டு இந்த பாடசாலையில் மாணவர்களை சேர்ப்பதற்கு பெற்றோர் மும்முரம் காட்டுவதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.