மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் பேலியகொடை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
களனி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.
சந்தேக நபர் பல தடவைகள் பேலியகொடை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மாணவியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவி பாலியல் துஷ்பிரயோகம்;சந்தேகநபர் கைது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் பேலியகொடை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். களனி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.சந்தேக நபர் பல தடவைகள் பேலியகொடை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பில் மாணவியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.