காலி மாவட்டத்தில் இடம்பெற்ற 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு பூதன்வயல் கிராமத்தைச்சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையை படைத்தார்.
இந்நிலையில் சாதனைப் பெண்மணியான சசிகுமார் ஜெஸ்மிதாவினை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகன் நேரில் சென்று வாழ்த்தியதுடன், உடல் உபாதை காரணமாக சிகிச்சைபெற்றுவரும் சாதனைப் பெண்மணி ஜெஸ்மிதாவின் உடல்நிலை குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துகொண்டார்.
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் இணைந்துநடாத்திய 49ஆவது தேசிய விளையாட்டுவிழாவானது கடந்த மாதம் காலி மாவட்டத்தில் இடம்பெற்றது.
குறித்த 49ஆவது தேசிய விளையாட்டுவிழாவில் பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில்பங்கேற்ற முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவின் பூதன்வயல் கிராமத்தைச்சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று சாதனைப் வீராங்கனையான சசிகுமார் ஜெஸ்மிதாவிற்கு நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அத்தோடு உடல் உபாதைகாரணமாக தற்போதே முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் அவரின் உடல்நலன் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டறிந்துகொண்டார்.
தெற்கிலும், வடக்கிலும் இனவாதத்திற்கு தூபமிடும் செயற்பாடுகள் நடக்கின்றன; ஜெகதீஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு காலி மாவட்டத்தில் இடம்பெற்ற 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு பூதன்வயல் கிராமத்தைச்சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையை படைத்தார். இந்நிலையில் சாதனைப் பெண்மணியான சசிகுமார் ஜெஸ்மிதாவினை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகன் நேரில் சென்று வாழ்த்தியதுடன், உடல் உபாதை காரணமாக சிகிச்சைபெற்றுவரும் சாதனைப் பெண்மணி ஜெஸ்மிதாவின் உடல்நிலை குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துகொண்டார். விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் இணைந்துநடாத்திய 49ஆவது தேசிய விளையாட்டுவிழாவானது கடந்த மாதம் காலி மாவட்டத்தில் இடம்பெற்றது. குறித்த 49ஆவது தேசிய விளையாட்டுவிழாவில் பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில்பங்கேற்ற முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவின் பூதன்வயல் கிராமத்தைச்சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று சாதனைப் வீராங்கனையான சசிகுமார் ஜெஸ்மிதாவிற்கு நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அத்தோடு உடல் உபாதைகாரணமாக தற்போதே முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் அவரின் உடல்நலன் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டறிந்துகொண்டார்.