• Sep 04 2025

கிளிநொச்சியில் மீள்குடியேறிய 43 ஆயிரம் குடும்பங்களுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்!

shanuja / Sep 4th 2025, 2:56 pm
image

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 43,ஆயிரம்  குடும்பங்களுக்கும் முழுமையான  இழப்பீடு வழங்க வேண்டும் என்று  ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் B.ஜோன் பற்றிக் தெரிவித்துள்ளார்.  


இது தொடர்பாக இன்று (04) நடத்திய ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


கிளிநொச்சி  மாவட்டத்தில் கடந்த கால  யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த  43ஆயிரம்  குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன 


இந்த நிலையில் அமைச்சரவையினால்  அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் இந்த 43 ஆயிரம் குடும்பங்களில் பன்னிரெண்டாயிரம் குடும்பங்களுக்கு மாத்திரமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன 


ஏனைய 31ஆயிரம்  குடும்பங்களுக்கும் இதுவரை இழப்பீட்டு கொடுப்பனவுகள்  வழங்கப்படவில்லை 


இவ்வாறு இழப்பீட்டு அலுவலகத்தினால் மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் . 


 இது தொடர்பாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் இழப்பீட்டு அலுவலகத்தினுடைய தலைவர் இழப்பீட்டு அலுவலகத்தினுடைய பணிப்பாளர் நாயகம்  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன்  இந்த வழக்கின்  இரண்டு அமர்வுகள் இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

கிளிநொச்சியில் மீள்குடியேறிய 43 ஆயிரம் குடும்பங்களுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 43,ஆயிரம்  குடும்பங்களுக்கும் முழுமையான  இழப்பீடு வழங்க வேண்டும் என்று  ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் B.ஜோன் பற்றிக் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக இன்று (04) நடத்திய ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி  மாவட்டத்தில் கடந்த கால  யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த  43ஆயிரம்  குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன இந்த நிலையில் அமைச்சரவையினால்  அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் இந்த 43 ஆயிரம் குடும்பங்களில் பன்னிரெண்டாயிரம் குடும்பங்களுக்கு மாத்திரமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன ஏனைய 31ஆயிரம்  குடும்பங்களுக்கும் இதுவரை இழப்பீட்டு கொடுப்பனவுகள்  வழங்கப்படவில்லை இவ்வாறு இழப்பீட்டு அலுவலகத்தினால் மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் .  இது தொடர்பாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் இழப்பீட்டு அலுவலகத்தினுடைய தலைவர் இழப்பீட்டு அலுவலகத்தினுடைய பணிப்பாளர் நாயகம்  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன்  இந்த வழக்கின்  இரண்டு அமர்வுகள் இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement