• Sep 04 2025

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சுற்றிவளைத்த அதிகாரிகள்

Chithra / Sep 4th 2025, 2:06 pm
image

மன்னார் நகரபகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதி இன்றி அசுத்தமாக இயங்கி வந்த உணவகம் ஒன்று இன்றையதினம் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார உத்தியோகஸ்தர்களால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரியமுறையில் பதிவு செய்யப்படாமல், அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் ஒத்துழைப்புடன் பொது சுகாதார உத்தியோகஸ்தர்களால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகப்பட்டது.

குறித்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேற்றப்படாமல் புழுக்கள் இளையான் உருவாகியும், அதேநேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தமை,

கையுறை தலையுறை பயன்படுத்தாமலும்  அத்துடன் உணவுப்பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில்  களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது

குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சுற்றிவளைத்த அதிகாரிகள் மன்னார் நகரபகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதி இன்றி அசுத்தமாக இயங்கி வந்த உணவகம் ஒன்று இன்றையதினம் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார உத்தியோகஸ்தர்களால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதுமன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரியமுறையில் பதிவு செய்யப்படாமல், அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் ஒத்துழைப்புடன் பொது சுகாதார உத்தியோகஸ்தர்களால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகப்பட்டது.குறித்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேற்றப்படாமல் புழுக்கள் இளையான் உருவாகியும், அதேநேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தமை,கையுறை தலையுறை பயன்படுத்தாமலும்  அத்துடன் உணவுப்பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில்  களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டதுகுறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement