• Jul 17 2025

ஜூலை 18 முதல் காற்றுடன் மழை - பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை!

shanuja / Jul 17th 2025, 5:38 pm
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி முதல் காற்றுடனான கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, ஜூலை 18 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்புள்ளது. 

குறிப்பாக மத்திய மலைகளின் மேற்கு சரிவில் உள்ள பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தீவு முழுவதும் மற்றும் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காலநிலை தொடர்பாக வானிலை ஆய்வுத் துறை வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மைக்காலமாக தீடீரென பல பகுதிகளில் காற்றுடனான மழை பெய்து பல சேதங்கள் ஏற்பட்டிருந்தன. தீடீரென அதிகரித்த காற்றினாலும் மழையாலும் எச்சரிக்கையின்றி இருந்த மக்கள் பலர் பலத்த சேதங்களை எதிர்கொண்டனர். 

இதனையடுத்தே தொடர்ச்சியாக காற்றுடனான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது

ஜூலை 18 முதல் காற்றுடன் மழை - பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி முதல் காற்றுடனான கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, ஜூலை 18 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக மத்திய மலைகளின் மேற்கு சரிவில் உள்ள பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தீவு முழுவதும் மற்றும் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே காலநிலை தொடர்பாக வானிலை ஆய்வுத் துறை வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தீடீரென பல பகுதிகளில் காற்றுடனான மழை பெய்து பல சேதங்கள் ஏற்பட்டிருந்தன. தீடீரென அதிகரித்த காற்றினாலும் மழையாலும் எச்சரிக்கையின்றி இருந்த மக்கள் பலர் பலத்த சேதங்களை எதிர்கொண்டனர். இதனையடுத்தே தொடர்ச்சியாக காற்றுடனான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement