• Jul 05 2025

309 சிவப்பு எச்சரிக்கை கொள்கலன்களை விடுவிக்க எந்த அரசியல் பிரமுகர் உதவி செய்தார்? முஜிபுர் கேள்வி

Chithra / Jul 5th 2025, 10:40 am
image


சர்ச்சைக்குரிய 309 சிவப்பு முத்திரை கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆழமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்துக்களை வெளியிட்ட அவர்,

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட  குழு நடத்திய விசாரணையின் நோக்கம் மிகவும் குறுகியது. 

இந்த கொள்கலன்கள் நிலையான நடைமுறைகளுக்கு வெளியே விடுவிக்கப்பட்டதா? என்பதைத் தீர்மானிப்பதில் மட்டுமே, குறித்த குழுவின் பணி இருந்தது.

கொள்கலன் விடுவிப்பில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதைக் கண்டறியவும், கொள்கலன்களுக்குள் உள்ள சரக்குகளின் தன்மையைத் தெளிவுபடுத்தவும் வேண்டும். 

அத்துடன் இந்த கொள்கலன்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டதா? என்பதையும், அவற்றை விடுவிக்க எந்த அரசியல் பிரமுகர் உதவி செய்தார்? என்பதையும் நிறுவுவது மிக முக்கியம் என்றும்  முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

309 சிவப்பு எச்சரிக்கை கொள்கலன்களை விடுவிக்க எந்த அரசியல் பிரமுகர் உதவி செய்தார் முஜிபுர் கேள்வி சர்ச்சைக்குரிய 309 சிவப்பு முத்திரை கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆழமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுத்தியுள்ளார்.நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்துக்களை வெளியிட்ட அவர்,ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட  குழு நடத்திய விசாரணையின் நோக்கம் மிகவும் குறுகியது. இந்த கொள்கலன்கள் நிலையான நடைமுறைகளுக்கு வெளியே விடுவிக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிப்பதில் மட்டுமே, குறித்த குழுவின் பணி இருந்தது.கொள்கலன் விடுவிப்பில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதைக் கண்டறியவும், கொள்கலன்களுக்குள் உள்ள சரக்குகளின் தன்மையைத் தெளிவுபடுத்தவும் வேண்டும். அத்துடன் இந்த கொள்கலன்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பதையும், அவற்றை விடுவிக்க எந்த அரசியல் பிரமுகர் உதவி செய்தார் என்பதையும் நிறுவுவது மிக முக்கியம் என்றும்  முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement