• Jul 09 2025

இனவாதத்தை தோற்றுவிக்கும் அரசியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்!

shanuja / Jul 9th 2025, 1:03 pm
image

இனவாதத்தினை விதைத்து இனங்களுக்கு இடையே முரண்பாட்டினை தோற்றுவிக்கும் மதவாத அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார். 


நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு  சபை மண்டபத்தில்  இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 


எமது நாவிதன் வெளி பிரதேச சபை 2006 ஆம் ஆண்டு தனி ஒரு பிரதேச சபையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை படிப்படியாக வளர்ச்சி அடைந்து சிறப்பான பிரதேச சபையாக விளங்குகின்றது.


இதற்கு இச்சபையின் முன்னை நாள் தவிசாளர்கள், உப தவிசாளர்கள் பதவிக்கால உத்தியோஸ்தர்கள் அனைவரது சிறப்பாக செயல்பாடுகளே காரணமாக அமைந்தது. அத்தகைய ஒத்துழைப்பு எமக்கும் தேவைப்படுகின்றது.


இன மத மொழி கலாச்சார அடிப்படைவாத சித்தாந்தங்களை மறந்து நாவிதன்வெளி பிரதேசத்தில் எமது மக்களை  பிரதிநிதித்துவப்படுத்தி ஒற்றுமையுடன் கூடியிருக்கின்றோம்.


எமக்கு வாக்களித்து வாக்களிக்காத மக்கள் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலைக் கடந்து சேவையாற்ற உறுதி கொண்டிருக்கின்றோம். இதற்கு ஏற்றால் போல்  உப தவிசாளர் ,கௌரவ உறுப்பினர்கள் அனைவரும்  எமது பிராந்தியத்தினை முன்னேற்றுவதற்கான  திட்ட வரைபுகளை வகுத்து அரச மற்றும் அரச சார்பற்ற துறைகளை அணுகி எமது பிரதேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்ல தவிசாளர் என்ற ரீதியில் எனது பணி, பங்களிப்பு அனைவருக்கும் எப்போதும் 100 வீதம் எப்போதும் இருக்கும். 


துறை சார் அமைச்சர்களையும் அல்லது நிறுவனங்களின் தலைவர்களை அணுகி அபிவிருத்திகளை மேற்கொள்ள நானும் உறுதுணையாக  நிற்பேன். எம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்காக எம்முடைய அதிகார எல்லைக்குட்பட்டு சேவையாற்ற கடமைப்பட்டிருக்கின்றோம். 34/% முஸ்லிம்கள் வாழும் இந்த பிரதேசத்தில் அந்த மக்களுக்கான நீதியானது நியாயமான விகிதாசார அடிப்படையிலான ஒதுக்கீடுகளும் அபிவிருத்திகளும் சரியாக நடைபெறும் என்பதனை  கூறிக்கொள்ள நான் விரும்புகின்றேன்.


ஏனெனில் நான் இன மத பாகுபாடு கடந்த எல்லைக்கால் அப்பால் நின்று  சேவையாற்றும் மக்கள் பணியாளன். நாம் மக்களுக்கான அரசியலை மேற்கொள்ளவே எம் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை உறுதியுடன் ஏற்றிருக்கின்றோம்.


இனவாதத்தினை விதைத்து இனங்களுக்கு இடையே முரண்பாட்டினை தோற்றுவிக்கும் மதவாத அரசியல் அல்லது கட்சி சார்ந்த அரசியலை  தவிசாளர் எந்த வகையில் எனக்கோ , எனது சக உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றேன்.-என்றார். 

 

இனவாதத்தை தோற்றுவிக்கும் அரசியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர் இனவாதத்தினை விதைத்து இனங்களுக்கு இடையே முரண்பாட்டினை தோற்றுவிக்கும் மதவாத அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார். நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு  சபை மண்டபத்தில்  இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாவிதன் வெளி பிரதேச சபை 2006 ஆம் ஆண்டு தனி ஒரு பிரதேச சபையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை படிப்படியாக வளர்ச்சி அடைந்து சிறப்பான பிரதேச சபையாக விளங்குகின்றது.இதற்கு இச்சபையின் முன்னை நாள் தவிசாளர்கள், உப தவிசாளர்கள் பதவிக்கால உத்தியோஸ்தர்கள் அனைவரது சிறப்பாக செயல்பாடுகளே காரணமாக அமைந்தது. அத்தகைய ஒத்துழைப்பு எமக்கும் தேவைப்படுகின்றது.இன மத மொழி கலாச்சார அடிப்படைவாத சித்தாந்தங்களை மறந்து நாவிதன்வெளி பிரதேசத்தில் எமது மக்களை  பிரதிநிதித்துவப்படுத்தி ஒற்றுமையுடன் கூடியிருக்கின்றோம்.எமக்கு வாக்களித்து வாக்களிக்காத மக்கள் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலைக் கடந்து சேவையாற்ற உறுதி கொண்டிருக்கின்றோம். இதற்கு ஏற்றால் போல்  உப தவிசாளர் ,கௌரவ உறுப்பினர்கள் அனைவரும்  எமது பிராந்தியத்தினை முன்னேற்றுவதற்கான  திட்ட வரைபுகளை வகுத்து அரச மற்றும் அரச சார்பற்ற துறைகளை அணுகி எமது பிரதேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்ல தவிசாளர் என்ற ரீதியில் எனது பணி, பங்களிப்பு அனைவருக்கும் எப்போதும் 100 வீதம் எப்போதும் இருக்கும். துறை சார் அமைச்சர்களையும் அல்லது நிறுவனங்களின் தலைவர்களை அணுகி அபிவிருத்திகளை மேற்கொள்ள நானும் உறுதுணையாக  நிற்பேன். எம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்காக எம்முடைய அதிகார எல்லைக்குட்பட்டு சேவையாற்ற கடமைப்பட்டிருக்கின்றோம். 34/% முஸ்லிம்கள் வாழும் இந்த பிரதேசத்தில் அந்த மக்களுக்கான நீதியானது நியாயமான விகிதாசார அடிப்படையிலான ஒதுக்கீடுகளும் அபிவிருத்திகளும் சரியாக நடைபெறும் என்பதனை  கூறிக்கொள்ள நான் விரும்புகின்றேன்.ஏனெனில் நான் இன மத பாகுபாடு கடந்த எல்லைக்கால் அப்பால் நின்று  சேவையாற்றும் மக்கள் பணியாளன். நாம் மக்களுக்கான அரசியலை மேற்கொள்ளவே எம் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை உறுதியுடன் ஏற்றிருக்கின்றோம்.இனவாதத்தினை விதைத்து இனங்களுக்கு இடையே முரண்பாட்டினை தோற்றுவிக்கும் மதவாத அரசியல் அல்லது கட்சி சார்ந்த அரசியலை  தவிசாளர் எந்த வகையில் எனக்கோ , எனது சக உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றேன்.-என்றார்.  

Advertisement

Advertisement

Advertisement