• May 26 2025

கோர விபத்துக்களில் சிக்கிய இரு சிறுவர்கள் பலி! நான்கு பேர் மருத்துவமனையில்!

Chithra / May 25th 2025, 1:05 pm
image


நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை- ஹக்மனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  14 வயதுடைய சிறுவன் செலுத்தி  சென்ற துவிச்சக்கர வண்டியுடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுவனை தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


இதேவேளை, மொனராகலை, எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன்  நான்கு பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் சிரிகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக பொலிஸார்  தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளாக மோட்டார் சைக்கிளில் ஐந்து சிறுவர்கள் இருந்ததாகவும், அவர்களில் யாரும் தலைகவசம் அணியவில்லை என்றும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோர விபத்துக்களில் சிக்கிய இரு சிறுவர்கள் பலி நான்கு பேர் மருத்துவமனையில் நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மாத்தறை- ஹக்மனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  14 வயதுடைய சிறுவன் செலுத்தி  சென்ற துவிச்சக்கர வண்டியுடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.காயமடைந்த சிறுவனை தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை, மொனராகலை, எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன்  நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிரிகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக பொலிஸார்  தெரிவித்தனர்.விபத்துக்குள்ளாக மோட்டார் சைக்கிளில் ஐந்து சிறுவர்கள் இருந்ததாகவும், அவர்களில் யாரும் தலைகவசம் அணியவில்லை என்றும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement