13 ஆம் நூற்றாண்டில் பொலநறுவ இராச்சியத்திற்குப் பிறகு, வன்னிப் பகுதி தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது.மன்னர் அக்கராஜன் அவர்களில் ஒருவர்.
அவர் அக்கராஜன் பிரதேசத்தை ஆண்டதாக தெரிவித்து கரைச்சி பிரதேச சபையினால் அக்கராஜன் சந்தியில் 2018.07.05 சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சிலை வைக்கப்பட்ட தினத்தில் நினைவு நாள் கொண்டாடப்படுவது வழமை
அந்த வகையில் இன்றைய தினம் நினைவு தின நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்பு சார்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்.
அக்கராயன் மன்னனின் நினைவு நாள் இன்று 13 ஆம் நூற்றாண்டில் பொலநறுவ இராச்சியத்திற்குப் பிறகு, வன்னிப் பகுதி தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது.மன்னர் அக்கராஜன் அவர்களில் ஒருவர். அவர் அக்கராஜன் பிரதேசத்தை ஆண்டதாக தெரிவித்து கரைச்சி பிரதேச சபையினால் அக்கராஜன் சந்தியில் 2018.07.05 சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சிலை வைக்கப்பட்ட தினத்தில் நினைவு நாள் கொண்டாடப்படுவது வழமை அந்த வகையில் இன்றைய தினம் நினைவு தின நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்பு சார்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்.