• May 21 2025

பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்; தேசபந்துவை கொல்ல முயற்சி! விசாரணைகள் ஆரம்பம்! பாதுகாப்பு அமைச்சர் தகவல்

Chithra / May 20th 2025, 12:43 pm
image


 

அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். 

இன்றுவரை சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று முகாம்களில் இருந்து பல துப்பாக்கிகள் பாதாள உலக குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நாங்கள் 1200 க்கும் அதிகமான துப்பாக்கிகளை கைப்பற்றியிருக்கின்றோம். இது தொடர்பில் பலரை கைது செய்துள்ளோம். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குற்றவாளிகளைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரவு ரோந்துகள் மற்றும் நடமாடும் ரோந்துகள் நடத்தப்படுகின்றன.

மேலும், முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள், 10 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒழுங்கமைக்கப்படாத குற்றச் செயல்களைத் தடுக்கவும், அவற்றில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் விசேட நடவடிக்கைப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மின்னஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி நெதர்லாந்து ஐபி முகவரிகளை வைத்திருப்பவர்களே  இந்த மின்னஞ்சல் மிரட்டலை விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னக்கோனை கொலை செய்வதற்கான சதிதிட்டம் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன, சிறைத்தண்டனை அனுபவிக்கும் சமன் குமார என்பவரிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதேவேளை எதிர்கட்சி தலைவர் சஜித்பி ரேமதாசவை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை செய்யதிட்டமிட்டுள்ளனர் என்ற பொய்யான தகவல் கிடைத்துள்ளது இது பொய்யான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்; தேசபந்துவை கொல்ல முயற்சி விசாரணைகள் ஆரம்பம் பாதுகாப்பு அமைச்சர் தகவல்  அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இன்றுவரை சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று முகாம்களில் இருந்து பல துப்பாக்கிகள் பாதாள உலக குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாங்கள் 1200 க்கும் அதிகமான துப்பாக்கிகளை கைப்பற்றியிருக்கின்றோம். இது தொடர்பில் பலரை கைது செய்துள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,குற்றவாளிகளைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரவு ரோந்துகள் மற்றும் நடமாடும் ரோந்துகள் நடத்தப்படுகின்றன.மேலும், முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள், 10 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர்  தெரிவித்துள்ளார்.அதன்படி, ஒழுங்கமைக்கப்படாத குற்றச் செயல்களைத் தடுக்கவும், அவற்றில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் விசேட நடவடிக்கைப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மின்னஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்துள்ளார்.ஜேர்மனி நெதர்லாந்து ஐபி முகவரிகளை வைத்திருப்பவர்களே  இந்த மின்னஞ்சல் மிரட்டலை விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.தேசபந்து தென்னக்கோனை கொலை செய்வதற்கான சதிதிட்டம் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன, சிறைத்தண்டனை அனுபவிக்கும் சமன் குமார என்பவரிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்கட்சி தலைவர் சஜித்பி ரேமதாசவை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை செய்யதிட்டமிட்டுள்ளனர் என்ற பொய்யான தகவல் கிடைத்துள்ளது இது பொய்யான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement