• Jul 10 2025

இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

Chithra / Jul 10th 2025, 10:34 am
image


மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், வேனின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.இவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், வேனின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement