• May 24 2025

பாதாள உலகக் கும்பலின் அச்சுறுத்தலுக்குள்ளான அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துகிறது! - நளின் பண்டார

Chithra / May 23rd 2025, 9:49 am
image

 

அரசாங்கம் தற்போது பாதாள உலகக் கும்பலின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. தமது பலவீனத்தை மறைப்பதற்காகவே எதிர்க்கட்சிகளுக்கு பாதாள உலகக் கும்பலுடன் தொடர்பிருப்பதாக வீண் பழி சுமத்தப்படுவதாக  பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எம் மீது வீண் பழி சுமத்திக் கொண்டிருக்காமல் பாதாள உலகக் குழுக்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசாங்கம் அதன் இயலாமையை மறைப்பதற்காகவே இவ்வாறு பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது.

பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாது போயுள்ளது. அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்காகவே இன்று அரசாங்கம் சுயேட்சை குழுக்கள் மற்றும் எமது உறுப்பினர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. 

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்காக அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.


கொழும்பில் ஆட்சி அமைப்பதற்கு பல கட்சிகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. அதற்கமைய விரைவில் தேசிய மக்கள் சக்தி கொழும்பில் அதன் பலத்தை இழக்கும். 

சுயேட்சை குழுக்கள் பல எம்முடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆளும், எதிர்த்தரப்பினர் அனைவரையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.என்றார். 

பாதாள உலகக் கும்பலின் அச்சுறுத்தலுக்குள்ளான அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துகிறது - நளின் பண்டார  அரசாங்கம் தற்போது பாதாள உலகக் கும்பலின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. தமது பலவீனத்தை மறைப்பதற்காகவே எதிர்க்கட்சிகளுக்கு பாதாள உலகக் கும்பலுடன் தொடர்பிருப்பதாக வீண் பழி சுமத்தப்படுவதாக  பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,எம் மீது வீண் பழி சுமத்திக் கொண்டிருக்காமல் பாதாள உலகக் குழுக்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் அதன் இயலாமையை மறைப்பதற்காகவே இவ்வாறு பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது.பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாது போயுள்ளது. அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்காகவே இன்று அரசாங்கம் சுயேட்சை குழுக்கள் மற்றும் எமது உறுப்பினர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்காக அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.கொழும்பில் ஆட்சி அமைப்பதற்கு பல கட்சிகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. அதற்கமைய விரைவில் தேசிய மக்கள் சக்தி கொழும்பில் அதன் பலத்தை இழக்கும். சுயேட்சை குழுக்கள் பல எம்முடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆளும், எதிர்த்தரப்பினர் அனைவரையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.என்றார். 

Advertisement

Advertisement

Advertisement